
மார்ச் 24, எண்ணூர் (Chennai News): சென்னையில் உள்ள எண்ணூர் (Ennore) பகுதியில் வசித்து வரும் தம்பதி முகுந்தன்-விஜயா. இத்தம்பதிக்கு அனிதா (வயது 14) என்ற மகள் இருந்தார். சிறுமி அனிதா, அங்குள்ள அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், சிறுமி நேற்று (மார்ச் 23) வீட்டில் இருந்த தனது செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றார். அப்போது, கைகள் ஈரமாக இருந்த நிலையில், சார்ஜ் போட்டுள்ளார். Job Alert: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இளைஞர்களே தவறவிடாதீங்க.!
மின்சாரம் தாக்கி பலி:
சிறுமி, ஈரக் கையால் ஸ்விட்சை அழுத்தியதும், அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் சிறுமி மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட பெற்றோர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமியின் மரணம் குறித்து, எண்ணூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.