ஜூலை 04, சென்னை (Chennai News): சமீப காலமாகவே விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் (Bomb Threats) விடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து இ-மெயில் மூலமாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்படுவதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சர்வதேச காவல்துறையினரின் உதவிகளோடு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம கும்பலை பிடிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். Couple Committed Suicide By Injecting Rat Poison: குழந்தை இல்லாத ஏக்கம்; எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை.. விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!
இந்நிலையில், சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, இ-மெயில் மூலமாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்திற்கு சிறப்பு படை காவல்துறையினர் விரைந்து வந்தனர். சுமார் 1 மணி நேரம் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தீவிரமாக நடத்தி வந்த சோதனையில், எந்தவித பொருளும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியான தகவல் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.