
பிப்ரவரி 25, சென்னை (Chennai News): சென்னை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர், அங்கு டெலிவரி ஊழியராக (Delivery Boy) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பெண் குளிப்பதை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். Child Marriage Case: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்.. வாலிபர் போக்சோவில் கைது..!
டெலிவரி ஊழியர் கைது:
இதனைப் பார்த்த அப்பெண் கூச்சலிட்டதும் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், டெலிவரி ஊழியர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.