Marriage | Instagram Logo File Pic (Photo Credit: Pixabay | Wikipedia)

பிப்ரவரி 25, திண்டிவனம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (Tindivanam) அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது நர்சிங் மாணவி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், ஒலக்கூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். Schoolgirl Gang Rape: மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 12ஆம் வகுப்பு மாணவர் கொடூர செயல்..!

சிறுமியை கடத்தி சென்று திருமணம்:

அதில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்துாரை சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 22) என்பவர், சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் (Instagram Love) மூலம் பழகியுள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்திச் சென்று ஆந்திராவில் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, ஆந்திராவிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், நேற்று முன்தினம் (பிப்ரவரி 23) மாலை, கார்த்திக்குமார் மற்றும் சிறுமியை மீட்டு திண்டிவனம் அழைத்து வந்தனர். மேலும், சிறுமியை திருமணம் செய்ததால், கார்த்திக்குமார் மீது திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.