Annamalai K | MK Stalin | Nirmala Sitharaman (Photo Credit @annamalai_k / @mkstalin / @BhimROCKY X)

செப்டம்பர் 14, சென்னை (Chennai): கோயம்புத்தூரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கருத்து பகிர்வு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman), தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் & மாநில பாஜக புள்ளி வானதி ஸ்ரீனிவாசன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறு--குறு நிறுவனங்களின் உரிமையாளர்களும் கலந்துகொண்ட நிலையில், அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசனும்  (Annapoorna Srinivasan) கலந்துகொண்டு இருந்தார். அப்போது, அவர் பேசியபோது தனது தரப்பு கோரிக்கையை முன்வைத்து இருந்தார். இந்த விஷயம் விவாதத்தை உண்டாக்கியது. கடை நடத்தும் உரிமையாளராக அவர் தனது கோரிக்கையை முன்வைத்தபோதிலும், அவரின் பேச்சுக்கள் கடுமையான விவாதத்தை உண்டாக்கியதைத் தொடர்ந்து, அவர் மத்திய நிதியமைச்சர் மற்றும் பாஜக எம்.எல்.ஏ-வை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அன்னபூரணா உரிமையாளர் வருத்தம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி மேற்படி பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. Udumalai Car Accident: கார் கட்டுப்பாட்டை இழந்ததால் சோகம்; 3 பேர் பரிதாப பலி., 3 பேர் படுகாயம்.! 

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) கண்டனம்:

இந்நிலையில், அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு முதல்வர் கூறுகையில், "மத்திய அமைச்சரின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது" என கூறினார். இந்த விவகாரம் தொடர் சர்ச்சையை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

அண்ணாமலை (K. Annamalai, BJP) வருத்தம்:

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு பாஜக சார்பில் அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளரான சீனிவாசன் அவர்களுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநிலம் & நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவு: