Gold Smuggling in Trichy Airport (Photo Credit: @ANI X)

ஜூன் 14, திருச்சி (Trichy News): வெளிநாடுகளுக்கு வேலை, சுற்றுலா போன்றவற்றுக்காக செல்வோர், மீண்டும் தாயகம் திரும்பும்போது தங்கம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை கடத்தி வருவதும் நடக்கிறது. இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, கடத்தல் செயல்களை முறியடிப்பது தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன. Youth Brutally Murdered: நடுரோட்டில் ஓடஓட விரட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ லீக்.! 

அதிகாரிகளின் செயல்கள் தொடர்ந்தாலும் குறையாத திருட்டு செயல்:

இவ்வாறான கடத்தல் செயல்களில் சில கும்பலும் திரைமறைவில் ஈடுபட்டு வருவதால், அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தாலும், புதிய முதலீடுடன் கும்பல் செயல்பாடுகளை தொடங்குகிறது. இதனால் பல நூதன முறைகளில் மலக்குடல், பெண்ணுறுப்பு, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் என கிடைக்கும் வழிகளில் தங்கத்தை கடத்த முயற்சித்தாலும், அதனை அதிகாரிகள் திறம்பட கண்டறிந்து தங்கத்தை கைப்பற்றி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்:

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் கொண்டு வந்திருந்த ஜூஸ் மிக்ஸர் இயந்திரத்தில் ரூ.1.83 கோடி மதிப்புள்ள 2.579 கிலோ அளவிலான 24 கேரட் தங்கம் கடத்தி வரப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.