Cyber Crime (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, சென்னை (Chennai News): உலகம் முழுவதும் ஆன்லைன் பணமோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இணையவழியில் பண மோசடி செய்யும் சைபர் (Cyber Criminals) குற்றவாளிகளான, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அன்வர்ஷா (வயது 27), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சல்மான்கான் (வயது 30), கிரீஷ் (வயது 25) மற்றும் ஜுபர் உல்லாகான் (வயது 23) ஆகியோரை சைபர் குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். Schoolboy Dies: 14 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கோழியை பிடிக்க சென்றபோது நேர்ந்த சோகம்..!

சைபர் குற்றவாளியாக மாற சிறப்பு பயிற்சி:

இவர்களிடம் இருந்து, மொபைல் போன் சிம் கார்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றை வைத்து ஆய்வு செய்தபோது, இவர்களின் கூட்டாளிகள், பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் பதுங்கி இருப்பதும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை காவல்துறையினர், கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு சைபர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சைபர் குற்றவாளி வாக்குமூலம்:

இதனிடையே, பெங்களூரைச் சேர்ந்த சல்மான்கான் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'எங்கள் ஊரில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தோர், ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் முறையை கற்றுத்தந்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலரும் பயிற்சி அளித்தனர். அதன்பின், நானும், என் கூட்டாளிகளும், வழிபர்களை மூளைச்சலவை செய்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வந்தோம். இதற்காக, எங்கள் மாநிலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கும் மையங்களையும் நடத்தி வந்தோம். அதில், அவர்கள் மோசடி செய்யும் தொகைக்கு ஏற்ப, எங்களுக்கு கமிஷன் தர வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடக மாநில மக்களிடம், அவர்களின் தாய் மொழியில், டிஜிட்டல் அரெஸ்ட், பங்கு சந்தையில் முதலீடு என, 20 வகையான மோசடிகளில் ஈடுபட்டு வந்தோம்.' இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.