Dead Body (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 20, குன்றத்தூர் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு, தங்கி தோட்டத்தை பராமரிக்கும் வேலையை செய்து வருபவர் கோபால். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 14). இவர், குடும்பத்தினருடன் இங்கு தங்கி தோட்டத்தை பராமரித்து வருகிறார். கோபாலுக்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில் இருப்பதால், படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். Two Girls Drowned: கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்..!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி:

இந்நிலையில், வழக்கம் போல நேற்று (பிப்ரவரி 19) காலை பள்ளிக்கு செல்ல சந்தோஷ் குமார் தயாராக இருந்தார். அப்போது, தோட்டத்தில் திறந்த வெளியில் உள்ள பெரிய கிணற்றின் மீது நின்று கொண்டிருந்த கோழியை கிணற்றுக்குள் விழாமல் இருப்பதற்காக அதனை துரத்த முயன்றுள்ளார். திடீரென கால் தடுமாறி பெரிய கிணற்றில் அவர் தவறி (Schoolboy Dies After Falling Into Well) விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்க முயன்றனர். அவர்களால் இயலாத நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிக் கிடந்த சந்தோஷ்குமார் உடலை சடலமாக மீட்டனர்.

மகனின் இறந்த செய்தி கேட்டு தந்தை உருக்கம்:

இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த சந்தோஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தைக்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில், மகன் இறந்த செய்தி கேட்டதும், மகனின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்த படி கிடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.