Baby Girl In Garbage Can: ஒரு மாத பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு.. அதிர்ச்சி சம்பவம்..!
சென்னையில் ஒரு மாத பெண் குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 06, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள நந்தனம் சி.ஐ.டி நகர் 4-வது பிரதான சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில் (Garbage Can)நேற்று (செப்டம்பர் 05) இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, குப்பைத் தொட்டியில் ஒருமாத பெண் குழந்தை (Baby Girl) கிடந்துள்ளது. Anbil Mahesh Poyyamozhi: சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு விவகாரம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி.!
பின்னர், இதுகுறித்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல்துறையினர், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர், குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தபோது, ஒரு வயதான பெண்ணும் அவருடம் இளம்பெண்ணும் வந்து அந்த பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் யார் என்பது குறித்து சைதாப்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

