செப்டம்பர் 06, அசோக் நகர் (Chennai News): சென்னையில் உள்ள அசோக் நகர், பெண்கள் அரசுப்பள்ளியில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர், மாணவர்களுக்கு தேர்வுக்கு ஆலோசனை வழங்குவதாக, ஆன்மீக ரீதியிலான சொற்பொழிவு வழங்கியதாக தெரியவருகிறது. மாணவர்களிடையே பாவ புண்ணியம், முற்பிறவி நியாயப்படுத்தல், குருகுலக்கல்வி உட்பவை குறித்து அவர் பேசியதை தொடர்ந்து, ஆசிரியர் குறுக்கிட்டு அவரிடம் வாக்குவாதம் செய்தார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. மேலும், பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. Teachers' Day 2024: "உன் உழைப்பிற்கு ஈடு இவ்வுலகில் எதுவும் இல்லை.." தேசிய ஆசிரியர் தினம்..!
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:
ஏற்கனவே நடிகர் தாமு பள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை என்ற பெயரில், அவர்களை அழ வைப்பதாக சர்ச்சைக்குரிய குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இன்று காலை மேற்கூறிய விஷயம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது. மேலும், பள்ளியில் கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகள், இனி நடத்தப்படக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்:
இதனிடையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மேற்கூறிய விபரம் தொடர்பாக இங்கு எடுக்கும் நடவடிக்கை, ஒட்டுமொத்த தமிழகத்திற்குமானது. இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது. அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும். இந்த விஷயம் தொடர்பாக விசாரிக்கவே நான் வந்துள்ளேன். 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
அரசுப்பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு:
அடுத்தது அரசு பள்ளிகளில் யாகம் எப்பொழுது நடத்த இருக்கிறீர்கள் @saravofcl? உங்க உதயநிதியுடைய பிசினஸ் பார்ட்னராக இருந்தவர் அன்பில் மகேஷ் என்பதால் சைலண்டாக இருக்கிறீர்களா?அவருடைய நெருங்கிய தோழர் என்பதால் சைலண்டாக இருக்கிறீர்களா? Focus on quality & scientific temper in Govt schools! pic.twitter.com/SpnTuQCanK
— Jayaram Venkatesan (@JayaramArappor) September 5, 2024