ஜூன் 13, தென்காசி (Tenkasi News): கேரளாவில் இருந்து தென்காசியை நோக்கி இன்று 22 சக்கரங்கள் கொண்ட ட்ராக்டர் லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் அந்த லாரி எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக பேருந்தில் இருந்து இரண்டு பேர் கீழே குதிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். TN Weather Report: தமிழகத்தின் வானிலை நிலவரம்.. அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை..!
தொடர்ந்து இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல் அறிந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கீ. சு. சமீரன் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தார். தற்போது இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசியில் கேரளாவில் இருந்து வந்த ராட்சத மினரல் லாரி மோதி தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்#Tenkasi #Bus_lorry_Accident pic.twitter.com/idn6ETlZuz— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) June 13, 2024