Karur Murder Case (Photo Credit : @ians_india X)

ஜூலை 20, கரூர் (Karur News): கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி (வயது 27). நேற்று இரவு தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தகராறு செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விஷ்ரூத் மனைவியை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். காவலர் குடும்பம் இப்படி செய்யலாமா? வரதட்சணை கொடுமை.. பெண் ஆசிரியை ஐசியூ-வில் பரிதவிப்பு‌.! 

மனைவியைக் கொன்ற கணவன் :

இந்த நிலையில் இன்று காலை மனைவியை பார்க்க சென்ற விஷ்ரூத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். இதனை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், காவல்துறையினருக்கு கொலை தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடனடியாக ஸ்ருதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவர் விஷ்ரூத்தை தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்மணி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.