மே 17, சென்னை (Chennai News): சென்னை, மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 'நான் எனது கணவர் மற்றும் மகள் ஆகிய 3 பேரும் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது கணவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். Benefits Of Green Tea: கிரீன் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? விவரம் உள்ளே..!
எனது மகள் தனியார் பள்ளியில் 12-ஆம் படித்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி அன்று மாலை 6.45 மணியளவில், எனது மகள் வீட்டின் அருகேயுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார். அப்போது, 4-வது பிளாக்கில் ஆவின் பால் கடை அருகே உள்ள சந்து வழியாக நடந்து வந்துக்கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், மகளை வழிமறித்து பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துவிட்டு, வேகமாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த எனது மகள் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை பற்றி என்னிடம் கதறி அழுதபடி கூறினார்.
இச்சம்பவத்தால், எனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனையடுத்து, இதுபோன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்' அதில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அதன் மூலம் இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து, தப்பி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.