Lawyer Brutally Attacked in Hosur (Photo Credit: @sureshkalipandi X)

நவம்பர் 20, ஓசூர் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் (Hosur) பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம், இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக (Lawyer) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு அவர் வெளியே வரும்போது, மர்மநபர் ஒருவர் அவரை பட்டப்பகலிலேயே சரமாரியாக அரிவாளால் (Scythe Cut) வெட்டியுள்ளார். Teacher Stabbed To Death: வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். விசாரணையில், வழக்கறிஞரை தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபர் ஆனந்த குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் அருகில் உள்ள JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்த வழக்கறிஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.