
ஜூன் 30, வாராங்கல் (Telangana News): தெலுங்கானா மாநிலம் வாராங்கலில் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் தர்மசாகர் மண்டலத்தில் உள்ள தட்டிகாயலா கிராமத்தில் நடந்த சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முலுகுவில் உள்ள போலோனிபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கங்கா. இவரது கணவர் ராஜு. தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ராஜூவுக்கு அதே பகுதியில் வசித்து வரும் மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சாக்லேட் கேட்ட குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்.!
பெண்ணை கொடுமை செய்த பயங்கரம் :
இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறிய நிலையில், கள்ளக்காதல் ஜோடி தனிமையில் பல நேரங்களில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜுவின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கணவர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கையும் களவுமாக பிடித்த தட்டிகாயலா கிராமத்து மக்கள் மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியிருக்கின்றனர். மேலும் நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மனைவியின் குடும்பத்தினர் கள்ளக்காதல் ஜோடியின் தலையில் மொட்டையடித்தும், பெண்ணின் அந்தரங்க உறுப்பில் முந்திரி பழச்சாறை ஊற்றியும் கொடுமை செய்துள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை :
இந்த சம்பவம் நடந்த பின்னரும் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காத நிலையில், தர்மசாகர் போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிந்து சம்பவத்துக்கு தொடர்பான நபர்களை தேடி வருகின்றனர். தற்போது கள்ளக்காதல் ஜோடி குறித்தும் எந்தவித தகவலும் கிடைக்காததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனரா? அல்லது கிராமத்து மக்களால் எங்கும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சித்ரவதை செய்யப்பட்ட பெண்மணி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் அவரை துன்புறுத்தி கொடுமை அரங்கேறியதாக கூறப்படுகிறது.