Avaniyapuram Jallikattu 2025 (Photo Credit: @NewsTamilTV24x7 X)

ஜனவரி 14, மதுரை (Madurai News): தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் 2025 (Pongal 2025) பண்டிகை இன்று முதல் சிறப்பிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவில் இன்று முதல் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளாகவும், உழவுக்கும்-மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கதிரவனை போற்றி கொண்டாடப்படும் சூரியப்பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகையான இன்று, ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, அந்தந்த பகுதி சார்பாக பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். Avaniyapuram Jallikattu 2025: சீறிப்பாயும் காளைகள்., சிதறவிடும் காளையர்கள்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று.! நேரலை இங்கே.!

ஜல்லிக்கட்டு போட்டிகள் (Jallikattu 2025):

மாட்டுப் பொங்கலின் சிறப்பை உணர்த்தும் ஜல்லிக்கட்டு பண்டிகை, மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிநாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள். வாடிவாசலில் இருந்து சீறிக்கொண்டு பாய்ந்து வரும் காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசு கொடுக்கப்படும். யாராலும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைக்கும் பரிசுகள் கிடைக்கும். 2025ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, இன்று காலை முதல் தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில துணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu) இன்று மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளை உரிமையாளர்களும் 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும், முதல் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த மாடுபிடி வீரர்:

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் 3ஆம் இடம் பிடித்தனர். சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை உரிமையாளரான பொன்னமவராதியை சேர்ந்த மலையாண்டி பெற்று சென்றார்.