Alien Temple In Salem: ஏலியனுக்கு கோவில் கட்டி அலப்பறை செய்யும் நபர்.. சேலத்தில் பரபரப்பு..!

சேலத்தை சேர்ந்த ஒரு நபர் ஏலியனுக்கு சிலை அமைத்து கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து வருகின்றார்.

Alien Temple In Salem: ஏலியனுக்கு கோவில் கட்டி அலப்பறை செய்யும் நபர்.. சேலத்தில் பரபரப்பு..!
Alien (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 02, சேலம் (Salem News): நம்மூரில் கோவில் கட்டுவதெல்லாம் சாதாரணமாகி விட்டது. குஷ்புவிற்கு நம் ஊரில் கோவில் கட்டினார்கள். அதே போல ரஜினிக்கு, பிரதமர் மோடிக்கும் கர்நாடகாவில் கோவில் உள்ளது. தற்போது இதுக்கெல்லாம் போட்டியாக ஒருவர் வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் (Alien Temple) கட்டி கும்பிட்டு வருகிறார். சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். Dark Tourism in India: இந்தியாவில் உள்ள டாப் 5 அமானுஷ்ய பேய் நகரங்கள் எது? பயப்படாம போய் பாருங்க..!

ஏலியன் கோவில்: கடந்த 2021 -ம் ஆண்டு முதல் இந்த கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கோயிலானது சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லோகநாதன் கூறியதாவது, "இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. தற்போது, கோயிலில் திருப்பணி பூஜை நடந்து வருகிறது. இதனால், குறைந்த அளவு பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் செய்யப்படும். முதலில் ஏலியன் இருப்பதை மனதார நம்ப வேண்டும். பிறகு 22 நிமிஷம் தியானம் செய்தால், உங்களுக்கு தேவையானதை பெறலாம். முழுக்க முழுக்க பிரபஞ்சத்தோட அனுமதி வாங்கி தான் சிலை வச்சிருக்கோம்" என்றார்.

(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).