ஆகஸ்ட் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாலை 4 மணிவரை கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. Ariyalur News: குழந்தையின் காதை கிழித்துவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் கம்பி நீட்டிய காதலி.. அரியலூரில் பரபரப்பு.!
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் இரவு 7 மணிவரை அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை இன்று (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.