Ambur Violence Case (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 28, ஆம்பூர் (Ambur News): வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. 25 வயதான இவர் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தோல் பதனிடும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் அவர் திடீரென மாயமானதாக கூறப்படும் நிலையில், தனது மனைவியை மீட்டுத்தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது கணவர் பழனி மனுத்தாக்கல் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசார் மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரித்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமது என்பவரை விசாரித்தார்.

காவலர் குடியிருப்பில் அடைத்து வைத்து தாக்கப்பட்ட ஷமீல் அகமது?

பவித்ரா மாயமானது குறித்து கேள்வி எழுப்பி அங்குள்ள காவலர் குடியிருப்பில் அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் ஷமீல் அகமதுவை கடுமையாக தாக்கியதால் அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. இதன்பின் ஷமீல் அகமதுவை உறவினர்கள் வசம் ஒப்படைத்த போலீசார், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் தாக்கியதால் உடல்நல குறைவுடன் பாதிக்கப்பட்ட ஷமீல் அகமது ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Vellore News: மின்கம்பம் உடைந்து விழுந்து 5 வயது சிறுமி துடிதுடித்து மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.! 

ஷமீல் அகமது உயிரிழப்பு :

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கொந்தளித்த உறவினர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஷமீல் அகமதுவை தாக்கிய காவலர் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ், காவலர்கள் ஐயப்பன், நாகராஜ், சுரேஷ், முரளி, முனியன், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சபாரத்தினம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

ஆம்பூர் கலவரம் - கல்வீசி தாக்குதல் நடத்திய உறவினர்கள் :

மேலும் ஷமீல் முகமதுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு 2015-ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி இரவில் தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட உறவினர்கள் போலீசாரை உடனடியாக கைது செய்து, பணியிட நீக்கம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பேருந்து, கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் பயணத்தை பயணிகள் பலரும் காயமடைந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய நிலையில், போலீசார் மீதும் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நடந்த கலவரத்தில் பெண் காவலர்கள் உட்பட 54 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இன்று வெளியாகும் ஆம்பூர் கலவர வழக்கு தீர்ப்பு :

இதனை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு கலவரத்திற்கு தொடர்புடைய 191 பேர் மீது வழக்கு பதிந்து 100 பேர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 118 பேருக்கு ஜாமீன் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்டம் முதல்வர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த ஷமீல் அகமது கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது என நீதிமன்றம் அறிவித்தது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்பூர் கலவரம் - வழக்கு தீர்ப்பு :

கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த கலவர வழக்கில் தொடர்புடைய 161 பேர் மீது 7 கட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி உத்தரவிட்டுள்ளார். போலீசாரை கண்டித்து நடந்த போராட்டத்தில் 22 பேர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் கலவரத்தின்போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ இஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.