Accident Video (Photo Credit: @Sriramrpckanna 1 X)

ஜனவரி 22, கடையநல்லூர் (Tenkasi News): தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில், சைக்கிளில் சென்ற சிறுவனை அடிக்கப்பாய்ந்த ஆட்டோ ஓட்டுநர்‌‌ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஜனவரி 20ம் தேதியான நேற்று மாலை 4 மணி அளவில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சிறுவன் ஒருவரும் சைக்கிளில் சென்றுள்ளார். Breaking: ஈரோடு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறையினர் தீவிர சோதனை.. பள்ளிக்கு விடுமுறை.!

ஆட்டோ ஓட்டுநர்‌‌ விபத்து:

சிறுவனை முந்திக்கொண்டு ஆட்டோ சென்ற நிலையில் சிறுவனை ஆட்டோ ஓட்டுநர், விளையாட்டிற்காக அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ முன்பக்கமாக சரிந்து வீட்டின் படிக்கட்டில் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர். உடனடியாக ஓடி, கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்கியதுடன், அதில் காயமடைந்து கிடந்த ஆட்டோ ஓட்டுநரை, வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநரின் விளையாட்டுத்தனத்தால் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

வைரலாகும் வீடியோ: