ஜனவரி 21, திண்டல் (Erode News): ஈரோடு (Erode) மாவட்டத்தில் உள்ள திண்டல் பகுதியில், பிவிபி மேல்நிலைப்பள்ளி (BVB Higher Secondary School, Thindal) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12 ம் வகுப்பு வரை உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இன்று பள்ளி வகுப்புகள் வழக்கம்போல செயல்பட்டு வந்தன. 12ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்றன. 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை; படித்துக்கொண்டிருந்தவர் விபரீத முடிவு.. பெற்றோர் கண்ணீர்.!
வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat):
இதனிடையே, இன்று மதியம் 01:30 மணிக்கு மேல், கல்வி நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோன பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட கல்வி அலுவலர், காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் அறிவுரையின்பேரில், உடனடியாக பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அவர்கள் வேனில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
காவல்துறை விசாரணை:
பெற்றோருடன் வந்து செல்லும் மாணவ - மாணவியரின் பெற்றோருக்கும் தொடர்புகொண்டு, அவர்களை அழைத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் இருந்த குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது யார்? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.