டிசம்பர் 31, பரமக்குடி (Ramanathapuram News): இராமநாதபுரம் (Ramanathapuram Jobs) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு நெறிமுறை வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது. வரும் சனிக்கிழமை 04 ஜனவரி 2025 அன்று, காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, அரசு ஐடிஐ அருகில் இருக்கும், அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
ஆலோசனைகள் & தேர்வு செய்யப்பட்டால் உடனடி பணி ஆணைகள்:
முகாமின் சிறப்பம்சங்களாக 100க்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் இருக்கும் பத்தாயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்காக உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில்முறை ஆலோசனைகள், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கான பதிவு வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவையும் வழங்கப்படுகிறது. யூடியூப் சேனலை உருவாக்கி சம்பாத்தியம் பார்க்க ஆசையா? தமிழக அரசே பயிற்சி வழங்குகிறது - உடனே முந்துங்கள்.!
கல்வித்தகுதி & முன்பதிவு செய்ய:
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் ஆகியோர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்று பலன் பெறலாம். வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு முற்றிலும் அனுமதி இலவசம். மேலும் கூடுதலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பாக அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அரியலூரில் (Ariyalur Jobs) எம்.ஆர்.எப் (MRF Company Jobs in Ariyalur) நிறுவனம் 200 பேரை வேலைக்கு எடுக்கிறது:
அதேபோல, அரியலூர் (Ariyalur News) மாவட்டத்தில் 03.01.2025 அன்று காலை 09:00 மணி முதல் மாலை 03:00 மணி வரையில், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், எம்.ஆர்.எப் (MRF) நிறுவனத்தின் சார்பில் மினி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் எம்.ஆர்.எப் நிறுவனம் சார்பில் 200 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர். டிகிரி, டிப்ளமோ பயின்றுள்ளார், 18 வயது முதல் 25 வயது வரை உடையோர், ஆண்களுக்கு மட்டும் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாதம் ஊதியமாக ரூ.19,500 வழங்கப்படும். சுயவிபரம், கல்வி சான்றிதழுடன் மாணவர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போக்குவரத்து, உணவு, தங்குமிடம் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94990 55914 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
டிப்ளோமா, டிகிரி படித்தவர்களுக்கு எம்ஆர்எப் (MRF) நிறுவனத்தில், ரூ.19,500 சம்பளத்தில் 200+ வேலைவாய்ப்பு..
அரியலூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு..
டிப்ளோமா, டிகிரி படித்தவர்களுக்கு எம்ஆர்எப் (MRF) நிறுவனத்தில், ரூ.19,500 சம்பளத்தில் 200+ வேலைவாய்ப்பு.. #Ariyalur | #JobAlert | #LatestLY_Tamil pic.twitter.com/2pUV7Ui7eU
— Sriramrpckanna (@Sriramrpckanna1) December 31, 2024