டிசம்பர் 31, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர், புத்தாக்க மேம்பாடு நிறுவனம் சார்பில், சென்னை எழும்பூரில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சி 09 ஜனவரி 2025 முதல் 11 ஜனவரி 2025 வரை, காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை வழங்கப்படும். இந்த பயிற்சி மாவட்ட தொழில் மையம், ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும்.
பயிற்சி வழங்கப்படும் விபரம்:
"சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் & ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள், சைபர் குற்றம் பாலிசி மற்றும் விதிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. Astrology: திக்., திக்.. 2025ம் ஆண்டில் தமிழகத்தின் நிலை எப்படி? அரசியல் மாற்றம் முதல் சிலிண்டர் பேராபத்து வரை.. ஜோதிடர் கணிப்பு.!
இணையவழியில் விண்ணப்பிக்கவும்:
ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய:
விழுப்புரம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் பயிற்சி பெற விரும்புவோர் 90801 30299 என்ற மொபைல் எண்ணிலும், சென்னை கிண்டி அலுவலகத்தில் பயிற்சி பெற விரும்புவோர் 90806 09808, 98416 93060 ஆகிய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின் முடிவில் அரசின் சார்பில் சான்றிதழும் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு கட்டணமாக ரூ.5000 செலுத்தப்பட வேண்டும்.