Chidambaram Nadarajar Temple Chariot Festival (Photo Credit: @News18TamilNadu X)

ஜனவரி 11, சென்னை (Chennai News): மார்கழி மாதத்தில் பௌர்ணமி நாளில், திருவாதிரை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் திருவாதிரை திருவிழா (Thiruvathirai 2025), சிவனின் அவதாரமான நடராஜருக்கும், சிவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். 2025ம் ஆண்டுக்கான திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் ஜனவரி மாதம் 12 & 13 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவாதிரை திருவிழா 2025 (Thiruvathirai 2025 Good Time):

ஆருத்ரா தரிசனம் ஒவ்வொரு சிவாலயத்திலும் நாளை நடைபெறும். குறிப்பாக சிதம்பரம், திருவாரூரில் இருக்கும் நடராஜர், தியாகராஜர் கோவில்களில் சிறப்பு தரிசனம், தேரோட்டமும் நடக்கும். திருவாதிரை நாளில் சிதம்பரம் நடராஜருக்கு களி படைத்தது வழிபாடு செய்யலாம். கோவிலிலும் களி பிரசாதமாக வழங்கப்படும். மங்கலநாதஸ்வாமி கோவில், கர்ணீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாத சுவாமி கோவில், மயூரநாதஸ்வாமி கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமர்சையாக நடக்கும். பக்தர்கள் சிதம்பரம் வர இயலவில்லை என்றாலும், உங்களின் ஊரில் இருக்கும் மேற்கூறிய கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

வாழ்த்து செய்தி:

1. திருவாதிரை நன்னாளில் நடராஜனின் நல்லாசி கிடைக்க இறைவனை வேண்டுவோம்!

2. ஆனந்த தாண்டவ நாயகன், எம்பெருமான் சிவனின் அருள் திருவாதிரை நாளில் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

3. தில்லைவனத்தில் நடராஜனாக எழுந்தருளி, பக்தர்களுக்கு இன்மை புகுத்திடையா எம் ராஜனே!

நடராஜர் கோவில் தேரோட்ட்டம்:

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் தேரோட்டம்:

தேரோட்டம் நேரலை: