Indian Airforce Airshow Chennai (Photo Credit: @DDTamil / @ANI X)

அக்டோபர் 06, சென்னை (Chennai News): இந்திய விமானப்படை 92 ஆண்டு தினத்தை சிறப்பிக்கும் நிலையில், விமான படையினரின் வான் சாகசங்கள் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது. இந்த வான் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வான் சாகச நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் பலரும் மெரினா கடற்கரையில் குவிந்து இருந்தனர். CM Trophy 2024: முதலமைச்சர்‌ கோப்பை 2024: மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம். ! 

நேரலை ஒளிபரப்பு:

இதனால் மெரினா, அண்ணா சதுக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. வழக்கமாக அண்ணா சதுக்கம் நோக்கி 100 பேருந்துகள் தினமும் இயக்கப்படும் நிலையில், இன்று கூடுதலாக 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்து சேவையும் வழங்கப்பட்டது. வீட்டில் இருந்தபடி நேரலையில் தூர்தர்சன், தூர்தர்சன் தமிழ், இந்திய விமானப்படையின் யூடியூப் பக்கத்திலும் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு:

இந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரவை சகாக்கள், முப்படைகளின் தளபதி அனில் சௌரா உட்பட பலரும் நேரில் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றார். நிகழ்ச்சிகளை நேரில் காண 3 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் நேரில் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ இரயில், புறநகர் இரயில், பேருந்து சேவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6,500 காவலர்கள், 1500 ஊர்க்காவல் படையினர் என மொத்தமாக 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மக்கள் அதிகம் கூடிய காரணத்தால் பேருந்து, இரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

விமானப்படை சாகசத்தை காணத் தவறியவர்கள் இங்கு காணவும்:

விமானப்படையின் அசத்தல் சாகச கிளிக்:

நேரலையை காணத் தவறவிட்டவர்களின் வசதிக்காக வீடியோ இதோ:

சிறப்புக்காட்சிகள் உங்களின் பார்வைக்காக:

சென்னை ஏர் ஷோ அசத்தல் கிளிக்ஸ் இங்கே: