அக்டோபர் 01, மீனம்பாக்கம் (Chennai News): செப்டம்பர் 30, 2024 அன்று இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 1 முதல் அக்டோபர் 8, 2024 வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Pudukkottai Shocker: சிறுமியை கிண்டல் செய்த நபரை தட்டிக்கேட்ட தந்தை குத்திக்கொலை; புதுக்கோட்டையில் பயங்கரம்.!
விமான நிலைய ஓடுதளங்கள் மூடப்பட்டு இருக்கும்:
இதனால் சென்னை விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. அதன்படி, முதன்முதலாக அக்டோபர் 1 ஆம் தேதி, நண்பகல் 13:45 முதல் 15:15 வரை மூடப்படும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் நேரங்கள் மூடப்பட்டு இருக்கும். விமானப் பயண அட்டவணைகளைச் சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் கவனம்:
இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயணிகளுக்கு ஏதுவான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம், மத்திய விமானப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு & வெளிநாடு பயணம் மேற்கொள்வோர், தங்களது விமானம் குறித்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்வது, நேர மாற்றத்திற்கு ஏற்ப முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தயாராக வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஒவ்வொரு நாளும் வான் சாகச நிகழ்ச்சியால், விமான சேவை பாதிக்கப்படும் நேரம் குறித்த அட்டவணை:
இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
சென்னை, செப்டம்பர் 30, 2024 - இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில்… pic.twitter.com/n8M8EL8bw8
— Chennai (MAA) Airport (@aaichnairport) September 30, 2024