டிசம்பர் 13, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் (Delta Districts) மற்றும் தென்மாவட்டங்களில் (Southern Tamilnadu) கனமழையானது (Heavy Rain) பெய்து வருகிறது. விடிய-விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான இடங்களில் குளம்போல நீரும் தேங்கியது. மாவட்ட அளவில் இருக்கும் பிரதான ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 24 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை: 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் இதோ.!
காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்பு:
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, காலை 10 மணி வரையில் அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கடலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிவரை மழை தொடர்பான அறிவிப்பு:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 13, 2024