School College Holiday (Photo Credit: @TimesofIndia X)

டிசம்பர் 13 , சென்னை (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விடிய-விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான இடஙக்ளில் குளம்போல நீரும் தேங்கியது. மாவட்ட அளவில் இருக்கும் பிரதான ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வானிலை: இன்று கொட்டிதீர்க்கபோகும் பேய்மழை; மக்களே கவனமாக இருங்க.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.! 

பள்ளிகளுக்கு விடுமுறை (School Holiday):

தேனி, கரூர், அரியலூர், திருவாரூர், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மற்றும் விடுமுறை வழங்கி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Holiday):

அதேபோல, கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.