Chennai News: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!

திருவள்ளூர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ (Kilpauk Medical College) கல்லூரியில் பயின்று வந்த மருத்துவ மாணவி டி.பி.சத்திரத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Chennai News: அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!
Chennai PG Medical Student Suicide Case (Photo Credit : Youtube / Pixabay)

ஆகஸ்ட் 05, சென்னை (Chennai News): திருவள்ளூர் மாவட்டம் டி.பி.சத்திரம் பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம்பெண் திவ்யா. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். வேலைக்காக டி.பி.சத்திரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறை எடுத்து தங்கி பயின்று வந்தார். இதனிடையே இன்று அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் என்ன?

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து திவ்யாவின் மரணம் குறித்து அவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பணிச்சுமை காரணமாகவே மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். கல்லூரி மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில், காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வானிலை: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.! 

மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் :

இந்த விஷயம் குறித்து விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், "பயிற்சி மாணவியான திவ்யாவுக்கு எந்த விதமான பணிச்சுமையும் கொடுக்கவில்லை. அவரது தற்கொலைக்கும், பணிச்சுமை தொடர்பான விஷயத்துக்கும் சம்பந்தமில்லை. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..

(The above story first appeared on LatestLY on Aug 05, 2025 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).