Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

ஜனவரி 18, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather), வளிமண்டல பகுதிகளில் ஏற்பட்டுள்ள கிழக்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக இன்றைய வானிலை (Today Weather) 18-01-2025 அன்று 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி, இன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. பொதுவாக காலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌, காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை (19-01-2025) கடலோர தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, உள்தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, யின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, இருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌, காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Gym Trainer Arrested: ஜிம்மில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை.. உடற்பயிற்சியாளர் கைது..! 

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):

இன்று (18-01-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான 7 மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23 செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் 18-01-2025 முதல்‌ 19-01-2025 வரையில் தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்டுகிறது.