ஜனவரி 17, சென்னை (Chennai News): சென்னை, கீழ்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உடற்பயிற்சி நிலையம் (Gym) செயல்பட்டு வருகிறது. அங்கு, 30 வயது பெண் ஒருவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக பயிற்சி எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஜிம் பயிற்சியாளரான சவுகார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்பவர் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இதில், இருவரும் நன்கு பழகி நண்பர்களாகி உள்ளனர். Road Accident: ஏழுமலையானை தரிசித்து விட்டு திருச்சி திரும்பிய பேருந்து.. லாரி மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு.!
காதல் தொல்லை:
இந்நிலையில், ஜிம் நிர்வாகம் சூர்யாவின் நடவடிக்கை சரியில்லாததால், அவரை கடந்த நவம்பர் மாதம் வேலையை விட்டு நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் சூர்யாவிடம் பேசுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சூர்யா, கடந்த ஜனவரி 13ஆம் தேதி மாலை ஜிம்மிற்குச் சென்று அந்தப் பெண்ணை கீழே அழைத்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.
ஜிம் பயிற்சியாளர் கைது:
மேலும், தன்னோடு மீண்டும் பேசவில்லை என்றால் தன்னுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என சூர்யா அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.