Kapaleeswarar Temple Fire (Photo Credit: @kvanand19 X)

பிப்ரவரி 13, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில், புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவில் வாசலில் கடந்த பிப்ரவரி 06ம் தேதி மர்ம நபரால் தீ வைக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விஷயம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.

காவல் நிலையத்தில் புகார்: சிசிடிவி கேமிரா கட்சிகளின்படி, சம்பவத்தன்று இரவில் வந்த மர்ம நபர் மிதிவண்டியில் வந்து செருப்பு உட்பட பல பொருட்களை கபாலீஸ்வரர் கோவில் வாசலில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இந்த விஷயம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் மர்ம நபருக்கு வலைவீசி இருந்தனர். Youth Bite Cop Finger: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரின் விரலை கடித்த இளைஞர்; விதியை மீறி பயணித்ததை கண்டித்ததால் அதிர்ச்சி செயல்.! 

குற்றவாளி கைது: இந்நிலையில், இருசக்கர வாகனத்தை திருட முயன்ற தீனதயாளன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீவைத்த சம்பவமும் தெரியவந்தது. சிவனே கோவில் முன்பு இருக்கும் செருப்புகளை எடுத்து தீவைத்து எரிக்கச்சொன்னதாகவும், கொசுக்கடியால் அவ்வாறு செய்ததாகவும் மாறுபட்ட தகவலை அவர் கூறி வருகிறார்.

இதனால் கைதான தீனதயாளனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.