Chennai Rains 16 Oct 2024 | Pradeep John (Photo Credit: @praddy06 X)

அக்டோபர் 16, சென்னை (Chennai News): தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஆந்திரா கடலோரப்பகுதி - புதுச்சேரி இடையே, சென்னைக்கு அருகில் மாலை கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அக்.16ம் தேதியான இன்று சென்னை (Chennai Rains), திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை (Chennai Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. School College Holiday: இன்று கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? லிஸ்ட் இதோ.! 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

கடந்த 2 நாட்களாகவே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அங்கு சாலைகளில் தேங்கும் நீரை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. வேளச்சேரி பகுதியை சேர்ந்ந்த மக்கள் பலரும் தங்களின் கார்களை பாதுகாப்பாக பாலத்தின் மீதும் நிறுத்தி இருந்தனர். ஒருசிலர் வீடுகளுக்குள் தங்களின் இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி இருந்தனர். விட்டுவிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால், ஒருசில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டாலும், அவை விரைந்து அகற்றப்பட்டு வருகின்றன. அரசின் சார்பில் அவசர உதவிகளுக்கு 1913 என்ற கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்புகள் குறைகிறது:

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் பிரதீப் ஜான் (Chennai Weatherman Pradeep John), சென்னைக்கு வரும் நாட்களில் மழை குறையும் என தெரிவித்துள்ளார். இதனால் வேளச்சேரி போன்ற பகுதிகளில் பாலங்களில் இருந்த கார்களை மக்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம் எனவும் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள் ஆந்திரா நோக்கி இருப்பதால், சென்னையில் இன்று அதிகபட்சமாக 20 செ.மீ-க்கு மழை பெய்யும் வாய்ப்புகள் குறைவு. சென்னையில் சாதாரண மழையே பெய்யலாம். கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் மட்டுமே 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் / புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழைக்கான சாதக சூழலை உங்களின் வீட்டில் இருந்தபடி Windy.com-ல் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னை வெதர்மேனின் கணிப்பு: