அக்டோபர் 16, சென்னை (Chennai News): தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஆந்திரா கடலோரப்பகுதி - புதுச்சேரி இடையே, சென்னைக்கு அருகில் நாளை மாலை கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அக்.16ம் தேதியான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை: இன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:
வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கடந்த 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
அதேபோல, சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய மாவட்டத்திலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் / புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழைக்கான சாதக சூழலை உங்களின் வீட்டில் இருந்தபடி Windy.com-ல் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.