மே 13, சென்னை (Chennai): அக்னி நட்சத்திரம் மற்றும் கோடைகாலம் காரணமாக, கடந்த சில வாரங்களாக மக்களை வாட்டிவதைத்த வெயிலின் தாக்கம், தற்போது தமிழகத்தில் சற்று குறைந்ததாக உணரப்படுகிறது. அடுத்தடுத்து பல மாவட்டங்களில் பெய்து வரும் மிதமான மற்றும் கனமழை காரணமாக, மக்கள் குளுகுளு (Tamilnadu Weather Update Today) சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர். வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால், வெயிலின் தாக்கமானது குறைந்து மக்கள் ஆசுவாசம் அடைகின்றனர். இருப்பினும், வெப்பத்தின் அளவானது தமிழ்நாட்டில் பரவலாக 40 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மழை நிலவரம் என்ன? இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அடுத்த ஏழு நாட்களுக்கான முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. குமரிக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 13-ம் தேதியான இன்று, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரையில் இருக்கக்கூடும். அதேபோல, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Couple Romance In Bus: பேருந்து பயணத்தில் எல்லை மீறிய காதல் ஜோடி; ரொமான்ஸ் காட்சிகள் வைரல்.!
அடுத்த 2 நாட்களுக்கான நிலவரம்: 14ம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல், பலத்த காற்றுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15ஆம் தேதியை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
16 முதல் 19 வரை மழை நிலவரம்: 16ஆம் தேதியை பொறுத்தமட்டில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். CBSE 10th Results 2024: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 93.60% தேர்வர்கள் தேர்ச்சி பெற்று சாதனை.!
வெப்பம் குறையும் நற்செய்தி: அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை வெப்பநிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையலாம். தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் வெப்பம் அதிகரித்து பின் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். சென்னை நகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.