Tomorrow weather (Photo Credit: LatestLY)

ஜனவரி 15, நுங்கம்பாக்கம் (Chenni News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், வங்கக்கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் வரும் ஆட்களில் தமிழ்நாட்டில் மழைக்கான பரவலான வாய்ப்புகள் இருக்கின்றன. 15 ஜனவரி 2025 ம் தேதியான இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. Gold Silver Price: சவரன் விலை ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது.. இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு.! 

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

ஜனவரி 16 அன்று இயல்பை விட அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் எனினும், ஜனவரி 17 முதல் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் இடி-மின்னலுடன் இன்று மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. நகரின் வெப்பநிலை அதிகபட்ஷமாக 27 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு (Chennai Weather Today):

மேல் காற்று சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில், ஜனவரி 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 19ம் தேதி முதல் 21 வரையில், மாஞ்சோலை, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்குப்பருவமழையில் தமிழ்நாடு இயல்பை விட 14 மடங்கு அதிகம் மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளது. இயல்பாக 293 மில்லிமீட்டர் மழை அளவு என்ற நிலையில், 447 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 845 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 16% அதிகம் ஆகும்.