Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 15, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Chennai Sangamam 2025: கிராமியக்‌ கலைஞர்களுக்கு ஒரு நாள்‌ ஊதியம்‌ ரூ.5000/- : தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,340 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து, இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.58,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.101 கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோ வெள்ளியின் விலை ரூ.100 உயர்ந்து, இன்று கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.