நவம்பர் 13, சென்னை (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணத்தால், தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியபின், இரண்டாவது மழையாக தற்போது கனமழை வெளுத்து வாங்குகிறது. School College Holiday: தொடர் மழை எதிரொலி.. மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு.!
இன்றைய வானிலை (Today Weather):
நவம்பர் 13ம் தேதியான இன்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் 14 செமீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 13.4 செமீ மழையும் பெய்துள்ளது.
காலை 10 மணிவரை (Rain Alert Till 10 AM) எங்கு மழை?
இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.