School, College Holiday due to Rain (Photo Credit: @Sriramrpckanna1 X)

நவம்பர் 13, சென்னை (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிய காரணத்தால், நேற்று முதல் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இன்றைய வானிலை (Today Weather):

நவம்பர் 13ம் தேதியான இன்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் 14 செமீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 13.4 செமீ மழையும் பெய்துள்ளது. TN CEO Archana Patnaik: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் பெண்... யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?. விபரம் உள்ளே.! 

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:

இந்நிலையில், இன்று அதிகாலை முதலாகவே பரவலாக தமிழ்நாடு முழுவதும் மழை தொடருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி, அம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி உத்தரவிட்டு இருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.