ஆகஸ்ட் 10, சென்னை (Chennai News): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை (Weather Update Tamilnadu) முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையை நிலவியது. தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமடைந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் புதுச்சேரியில் 15 சென்டிமீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் தொழுதூரில் 14 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 12 சென்டிமீட்டர் மழையும், சேலம் மாவட்டம் விரகனூர், அரியலூர் மாவட்டம் செந்துறை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் தலா 11 சென்டிமீட்டர் மழையும் பெய்து இருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் 38.1 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6 டிகிரி செல்சியஸும் பதிவாகி இருக்கிறது.
இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை? விபரம் இதோ:
அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தமட்டில் தமிழகத்தின் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 10ம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசலாம். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 11ம் தேதியை பொறுத்தமட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
12 & 13 தேதிகளில் எங்கெல்லாம் மழை?
12ஆம் தேதியில் கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டத்தில் மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 13ம் தேதியை பொறுத்தமட்டில் கோயம்புத்தூர், தேனி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பகுதிகள் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம். Car-Bus Accident: கார்-பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..!
தலைநகரில் வானிலை நிலவரம்:
14ஆம் தேதியை பொறுத்தமட்டில் கோயம்புத்தூர், தேனி மாவட்டத்தில் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 15 மற்றும் 16ஆம் தேதியில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோரப்பகுதியில் 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தெந்தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு, வட மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை வீசும். அரபிக் கடல் பகுதிகளை பொறுத்தமட்டில் 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மத்திய மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளாவின் தெற்கு கடலோர பகுதி, அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்றும் எச்சரிக்கப்படுகிறது.