Rain Alert (Photo Credit: Pixabay)

ஜூன் 16, சென்னை (Chennai): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை (TN Weather Update) அறிக்கையை பொறுத்தமட்டில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பெய்யவில்லை. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது, சென்னை நகரில் மீனம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது, குறைந்தபட்சமாக நாமக்கல்லில் 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தமட்டில், "தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

22ம் தேதி வரை நாளைய வானிலை நிலவரம் என்ன?

இதனால் 16ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19ம் தேதி முதல் 22 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மணி முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பை பொறுத்த வரையில், 16 ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும். Terrell Lewis & Mia Mercy: பாலியல் தொழிலாளியிடம் உல்லாசம்; பணம் கொடுக்க மறுத்து ஓட்டமெடுத்த நபர்.. வருவாய்க்காக நிர்வாணமாக ஓடிய துயரம்.! 

மீனவர்களுக்காக எச்சரிக்கை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தமட்டில் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையில் வீசக்கூடும்.

அரபிக்கடலுக்கும் செல்ல வேண்டாம்:

வங்கக்கடல் பகுதியில் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, தென் மற்றும் மத்திய வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதி, தெற்கு மற்றும் ஆந்திர கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். அதேபோல, அரபிக்கடல் பகுதியில் 16 முதல் 10-ஆம் தேதி வரையில் அரபிக்கடலின் மத்திய பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.