செப்டம்பர் 08, சென்னை (Chennai News): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கையை பொறுத்தமட்டில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில், காரைக்கால் பகுதியில் மழை பெய்துள்ளது, புதுவையில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 32.2 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.8 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. 7ம் தேதியான நேற்று காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 05:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணியளவில், கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவிலும், கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கு 230 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. TVK Party: தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது அங்கீகாரம்; நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டம்.!
தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பும், சென்னையின் நிலையும்:
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் கடற்கரைப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து 09ம் தேதி மாலை அல்லது இரவு வாக்கில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்காள கடற்கரை இடையே கரையை கடக்கக்கூடும். இதனால் எட்டாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதியில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். மேலும், வலுவான தரைக்காற்று 30 கிலோ மீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். பத்தாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னனுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம். Bus - Car Crash: அரசு பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பரிதாப பலி... இராமநாதபுரத்தில் சோகம்.!
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோரப் பகுதியில் எட்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை மன்னார்குளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசும் .வங்கக்கடலில் எட்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதி, தெற்கு, மத்திய, வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அரபிக்கடலை பொறுத்தமட்டில் எட்டாம் தேதி முதல் 12-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று, மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.