செப்டம்பர் 08, இராமநாதபுரம் (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி, பிரப்பன்வலசை பகுதியில், அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென வாந்தி வரவே, பேருந்தின் ஓட்டுநர் சாலையோரம் பேருந்தை நிறுத்த முற்பட்டுள்ளார். அச்சமயம், இராமந்தபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து.. நடைபயிற்சியில் ஈடுபட்ட தந்தை, மகள் பலி..!
ஐந்து பேர் பரிதாப பலி:
சாலையோரமாக பேருந்து நிறுத்தப்படுவதை சற்றும் எதிர்பாராத கார் ஓட்டுநர், சுத்தரிப்பதிற்ற்குள் கார் - அரசு பேருந்தின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில், கார் - பேருந்தின் பின்புறம் சொருகி உருகுலைந்துபோனது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், செந்தில் மனோகரன், பிரனவிகா, தர்ஷிளா ராணி, அங்காள ஈஸ்வரி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதற்கட்ட தகவல் இதோ:
இரண்டு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்ட்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஐந்து பேரும் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. படுகாயமடைந்தவர்களில் பிறந்து 12 நாட்களே ஆகும் குழந்தையும் இருக்கிறது. இவர்கள் இருவரும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாதிக்கப்ட்டுள்ளனர். பலியானோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.