வானிலை: காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் மழை (Tamilnadu Rains) பெய்ய அறிகுறியாக காலையிலேயே மேகங்கள் சூழ்ந்திருக்க, அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை (Chennai Weather), திருவள்ளூர், இராணிப்பேட்டை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai RMC) அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்னிந்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 8ம் தேதியான இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. "120 பவுன் பத்தல" - வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் தொடரும் சோகம்.!
காலையில் கொட்டப்போகும் மழை:
தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய உள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
* சென்னை
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* ராணிப்பேட்டை
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* வேலூர்
* திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிவரை மழை அறிவிப்பு:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 8, 2025
(The above story first appeared on LatestLY on Aug 08, 2025 08:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

