வானிலை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆகஸ்ட் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 21 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. சேலம்: வளர்ப்பு நாய் கடித்த இளைஞர் ரேபிஸ் தொற்று பாதித்து ஓராண்டு கழித்து பலி.. செல்லப்பிராணி பிரியர்களே கவனம்.!
இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 25-ஆம் தேதிக்குள் ஒரிசா, மேற்கு வங்காள கடலோரப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai Weather):
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் வானிலையை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமுத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகமும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 23, 2025 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

