ஆகஸ்ட் 23, ஆத்தூர் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், மந்தைவெளி பகுதியில் வசித்து வருபவர் முத்து. இவரின் மகன் தர்மன். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்னர் நாய் தர்மனை கடித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருப்போர் மருத்துவமனைக்குச் சென்று ஊசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால், தர்மன் அதனை கண்டுகொள்ளவில்லை. வீட்டில் இருக்கும் நாய் தான் ஒன்றும் செய்து என அலட்சியம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. Chennai Sanitary Worker Death: சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி.. ரூ.20 லட்சம் நிதிஉதவி.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!
ரேபிஸ் தொற்று பாதித்து மரணம் (Tragic Rabies Death in Salem):
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தர்மனுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினரால் மீட்கப்பட்டு ஆத்தூரில் செயல்படும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அப்போது, சிகிச்சை பலனின்றி தர்மன் (Rabies Claims Life of Young Man in Tamilnadu) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாய் கடியில் அலட்சியமாக இருந்ததால் தர்மன் மரணித்துவிட்டதாக குடும்பத்தினர் கண்ணீர் தெரிவிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Gold Rate Today: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வெள்ளி.. டஃப் கொடுக்கும் தங்கம்.. வார இறுதியில் கிடுகிடு உயர்வு.!
ரேபிஸ் தொற்று மரணம் ஏன்? (Rabies Diseases Death):
நாயின் உமிழ்நீரில் உள்ள கிருமிகளில் இருந்து பரவும் ரேபிஸ் தொற்று உயிரை பறிக்கும் அபாயம் கொண்டது ஆகும். நாய் கடித்தால் உடனடியாக காயத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தாமதமின்றி மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ரேபிஸ் பாதித்த நாய் நகத்தினால் உங்களை கீறினாலும் ரேபிஸ் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம். செல்லப்பிராணிகளை வைத்துள்ளார் அவைகளுக்கு சுழற்சி முறையில் நோய்தடுப்பு ஊசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். நமது வீட்டில் வளர்க்கும் நாய் தானே என அலட்சியமாக செயல்பட்டால், கட்டாயம் அது மிகப்பெரிய பக்கவிளைவை ஏற்படுத்தும். நாய் கடித்து பல ஆண்டுகள் கழித்தும் ரேபிஸ் நோய் மனிதரின் உயிரை பறிக்கும் உச்சகட்ட அபாயம் கொண்டது என்பதை மறக்க வேண்டாம்.
நாய்களின் மீது கருணை காட்டும் அதே சமயத்தில், நமது உடல்நலனை பாதுகாப்பதற்கான பங்கு நமக்குரியது என்பதில் தெளிவாக இருங்கள்.