ஆகஸ்ட் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கோவை, நெல்லை, தேனி, ஈரோடு, கன்னியாகுமரி, நீலகிரி, சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 40.5° டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 21.5 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30-08-2025 முதல் 01-09-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-09-2025 முதல் 05-09-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Edappadi Palanisamy & Annamalai: புத்துயிர் பெரும் அதிமுக-பாஜக கூட்டணி.. கவனம் பெற்ற அண்ணாமலை - எடப்பாடி பழனிச்சாமி செயல்கள்.!
அதிக வெப்பம் எச்சரிக்கை:
30-08-2025 மற்றும் 31-08-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):
இன்று (30-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்காக எச்சரிக்கை:
30-08-2025 (இன்று) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை (31-08-2025) மற்றும் நாளை மறுநாள் (01-09-2025) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.