ஆகஸ்ட் 30, தேனாம்பேட்டை (Chennai News): சென்னை தேனாம்பேட்டையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மூப்பனாரின் நினைவு நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜி.கே. மூப்பனாரின் மகன் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி, கூட்டணி கட்சியினரையும் அழைத்து விழாவை சிறப்பித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர்கள் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் உட்பட பலரும் பங்கேற்று இருந்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினர் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்து இருந்தனர்.
நிர்மலா சீதாராமன் பேச்சு:
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் மாறுதலை கொண்டு வர தேவை உள்ளது. அதனை மக்களுக்காக பூர்த்தி செய்ய வேண்டிய சக்தி நம் அனைவரிடமும் உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி மூலமாக அதனை எடுத்துச்செல்ல வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. தமிழக மக்களிடம் நம்மிடம் நல்லாட்சி கேட்கிறார்கள். போதைப்பொருள், சாராயம் வேண்டாம். ஒரே குடும்பம் பிழைத்து மக்களுக்கு ஆதரவு இல்லை என வருந்துகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்தி மக்களுக்கு தேவையான தொண்டு ஆற்றப்பட வேண்டும். சிறுசிறு உட்கட்சி பூசல் வேண்டாம். அதனைப்பற்றி கவலையும் வேண்டாம். முதிர்ச்சியடைந்த அரசியல் தலைவர்கள் பக்குவத்துடன் இருக்கிறார்கள். நமது கூட்டணிக்கு வெற்றியை தேட, நல்லாட்சி தர அனைவரும் ஒற்றுமையாக உழைப்போம்" என பேசினார். Trending Video: யானை வந்திருச்சு ஓடுங்கடா.. ஊருக்குள் புகுந்த ஒற்றைக்கொம்பன்.. தலைதெறிக்க ஓடிய கோவை மக்கள்.!
அண்ணாமலையின் முந்தைய பேச்சும், அமைதியும்:
தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி அமைந்தது திமுகவுக்கு முந்தைய காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. குறிப்பாக 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், 2024 மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என திமுக பாஜக வந்துவிடும் என பிரச்சார பயணம் மேற்கொண்டு வெற்றிக்கனியை தந்தது. இதற்கிடையில், அதிமுக, பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் என பல சச்சரவுகள் நடந்தது. அன்று பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதனால் கூட்டணியும் முறிந்தது. பின் 2024 மக்களவை தேர்தலை அதிமுக, பாஜக கூட்டணி தனித்தே களம்கண்டு இருந்தன. 2026 தேர்தலுக்காக மீண்டும் பாஜக, அதிமுக இணைந்துள்ளன. அண்ணாமலை பொறுப்பில் இருந்தபோது கடும் விமர்சனத்தை முன்வைத்தபோதிலும், அதிமுக பதில் சொல்லாமல் இருந்தது. சிறுசிறு எதிர்ப்பு குரல் மட்டுமே எழுந்தன. தற்போது நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்று கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கவனத்தை ஈர்த்த செயல்பாடுகள்:
இதனால் அண்ணாமலையின் எதிர்ப்பு பேச்சுக்கள் குறைந்தது. அண்ணாமலை போல நயினார் நாகேந்திரன் அதிரடி அரசியல் செய்வதில்லை. அவரது பாணி வேறு, நமது பாணி வேறு எனவும் தெரிவித்து இருந்தார். அண்ணாமலையும் தனது வாதங்களை குறைத்துக்கொண்டு இருந்தார். இந்நிலையில், மூப்பனாரின் நினைவு நாளில் அண்ணாமலை பங்கேற்றபோது, எடப்பாடி பழனிச்சாமி ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து நலம் விசாரித்தனர். அண்ணாமலையின் முகத்தில் அரசியல் தலைவரை கருத்தியல் ரீதியாக தூற்றிய விமர்சனம் தெரிந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையுடன் பேசினார். மேலும், அவரை அழைத்து மூப்பனாருக்கு மரியாதை செலுத்தவும் கூறினார். அதிமுக கூட்டம் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து புறப்படும்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அண்ணாமலையிடம் சென்றுவருவதாக கூறிவிட்டு புறப்பட்டார். இது கவனம் பெற்றுள்ளது. இது அதிமுக, பாஜக தொண்டர்களிடையே கவனத்தை பெற்று வருகிறது.