Tomorrow Weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 06, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

06.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிககனமழையும்‌, சேலம்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர்‌, திண்டுக்கல்‌, தேனி, மதுரை, விருதுநகர்‌, தென்காசி மற்றும்‌ சிவகங்கை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

07.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, இருநெல்வேலி, விருதுநகர்‌,

கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Chennai Air Show: இலட்சக்கணக்கில் திரண்ட சென்னை மக்கள்.. வானில் சாகசம் செய்து அசத்திய இந்திய விமானப்படை.. அசத்தல் கிளிக்ஸ் இங்கே.! 

18 மாவட்டங்களில் அக்.08 அன்று மழை:

08.10.2024 அன்று தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர்‌, விருதுநகர்‌, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌ மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)
Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

அக்.09 அன்று 19 மாவட்டங்களில் மழை:

09.10.2024 அன்று தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர்‌, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10 & 11ம் தேதி மழை நிலவரம்:

10.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்‌, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்‌, மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. TN Alert App: புயல், மழை, வெள்ளமா? இனி கவலை வேண்டாம்... உடனடி அலர்ட்களை 'TN Alert' செயலியில் பெறுங்கள்.. விபரம் உள்ளே.! 

தலைநகர் சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Forecast Alert):

12.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. சென்னை வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36” செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌யசியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

06.10.2024 முதல் 10.10.2024 வரையில், தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌, தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடலில் 06.10.2024 முதல்‌ 08.10.2024 வரை கேரள கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகள்‌, மாலத்தீவு பகுதிகள்‌, தென்மேற்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌" என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.