டிசம்பர் 13, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் (Delta Districts) மற்றும் தென்மாவட்டங்களில் (Southern Tamilnadu) கனமழையானது (Heavy Rain) பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விடிய-விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான இடஙக்ளில் குளம்போல நீரும் தேங்கியது. மாவட்ட அளவில் இருக்கும் பிரதான ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டெல்டா, தென்மாவட்டங்களில் கனமழை:
குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பகுதிகள், அதனையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் நீராடவும் தடை விதிக்கப்ட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நல்ல கனமழை வெளுத்து வாங்கியது. வானிலை: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!
வெளுத்து வாங்கிய மழை:
கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை ஊத்து பகுதியில் 50 செமீ மழையும், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அப்பகுதியில் 25 செமீ மழையும், நெல்லையில் 20 செமீ மழையும், மயிலாடுதுறையில் 19 செமீ மழை பெய்துள்ளது. அரியலூரில் 17 செமீ மழையும், கோவில்பட்டியில் 14 செமீ மழையும், கடலூர் விருத்தாசலத்தில் 12 செமீ மழையும் பதிவாகி இருக்கிறது.
இன்றைய வானிலை (Today Weather):
13-12-2024 இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.